சவுதி அரேபியாவில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் விபத்தில் பலி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 28 Jun 2021 1:32 AM IST (Updated: 28 Jun 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி வாலிபர் விபத்தில் பலியானார்.

கறம்பக்குடி
கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ் (வயது 35). இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஜெய்ஸ்ரீ(6), மதுமித்ரா (4) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்த ராஜேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் கடந்த 2019-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு சென்றார். அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் ராஜேஷ் இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் ராஜேசின் மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதற்கிடையே ராஜேசின் மனைவி உமாமகேஸ்வரி புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். அதில், சவுதி அரேபியாவில் இறந்த தனது கணவர் ராஜேஷின் மரணம் குறித்து விரிவான விவரங்களை வெளியுறவுத்துறை மூலம் பெற வேண்டும், கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தனது 2 பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Next Story