குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கத்தியால் குத்திய கணவர்


குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:08 AM IST (Updated: 28 Jun 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நெற்குன்றம், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தாம்பரம், 

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பழவியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைச்செல்வி கடந்த மார்ச் மாதம் கணவரை விட்டு பிரிந்து, தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அங்கு சென்ற ரவிச்சந்திரன், கலைச்செல்வியை தன்னுடன் குடும்பம் நடத்த வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் கலைச்செல்வி வர மறுத்தார். இதனால் அவரிடம் தாலியை கழற்றி தரும்படி கேட்டார். அதற்கு கலைச்செல்வி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story