பிரான்சில் இருந்து நேரடி விமான சேவை: முதன் முதலாக 111 பயணிகளுடன் சென்னை வந்த விமானம்


பிரான்சில் இருந்து நேரடி விமான சேவை: முதன் முதலாக 111 பயணிகளுடன் சென்னை வந்த விமானம்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:17 AM IST (Updated: 28 Jun 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரீசில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு பயணிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.

ஆலந்தூர்,

பாரீசில் உள்ள சாா்லஸ் டி கோலே விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10.25 மணிக்கு 111 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியா்களுடன் புறப்பட்ட ஏா்பிரான்ஸ் போயீங் ரக விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.25 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு வந்தது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானத்தை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனா். விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான என்ஜினீயர்கள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

அதன் பின்பு விமான ஊழியா்கள் அனைவரும் ஓய்வுக்காக சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனா். இன்று(திங்கட்கிழமை) அதிகாலை இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து பாரீஸ் புறப்பட்டு செல்லும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story