சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க செயல்திட்டம் உருவாக்க வேண்டும்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க செயல்திட்டம் உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:22 AM IST (Updated: 28 Jun 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க செயல்திட்டம் உருவாக்க வேண்டும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

சென்னை, 

சென்னையில் மழைக்காலங்களில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதாகவும், இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வெளியான புகாரை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மழைநீர் தேங்காமல் தடுக்க ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணர் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் பிரச்சினையை தீர்க்க உதவாது. எனவே, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் கூட்டம் நடத்தி, மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க செயல் திட்டத்தை உருவாக்கி முறையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story