பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2021 5:48 PM IST (Updated: 28 Jun 2021 5:48 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:


பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். வருமானவரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம், மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, நகர செயலாளர் ஆசாத், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் பசும்பொன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் நல்லுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 அதிகாரிபட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  நிலக்கோட்டை, வேடசந்தூர்

நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். 

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அல்லிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் போது ராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், நிலக்கோட்டை நகரச்செயலாளர் திருப்பதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் மணிகண்டன், பாவலன், சுதந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். 

மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

 வத்தலக்குண்டு, பழனி

இதேபோல் வத்தலக்குண்டு பஸ் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி ஜெய்ஸ்வால் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழனி பஸ்நிலைய ரவுண்டானாவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மணாளன், துணை செயலாளர் தமிழண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நெய்க்காரப்பட்டி

இதேபோல் நெய்க்காரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொப்பம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் துருவன்ராசு ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story