ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
கூடலூர்
கூடலூர் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் கூடலூர் மைக்கா மவுண்ட் பகுதியில் ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனால் மைக்கா மவுண்ட், ஆணை செத்தகொல்லி, தோட்டமூலா உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன்
மற்றும் வன அமர்வு அலுவலரும், கொரோனா தடுப்பு பறக்கும் படை அலுவலருமான சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story