சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 8:25 PM IST (Updated: 28 Jun 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேனி:
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்த முனியாண்டி மகன் ஹரிகரன் (வயது 19). இவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாகவும், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் சென்றது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்திய போது அந்த சிறுமி தனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் ஆகிய இரு சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகரனை நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story