விளாத்திகுளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3பேர் கைது


விளாத்திகுளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3பேர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 9:01 PM IST (Updated: 28 Jun 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது,
போலீசாருக்கு தகவல்
விளாத்திக்குளம் அருகேயுள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் விலக்குப்பகுதியில் சிலர் லாரியில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதன் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உத்தரவின் பேரில், விளாத்திக்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ்  மேற்பார்வையில் நேற்று குளத்தூர் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர்.
மணல் திருட்டு
அங்கு சாத்தான்குளம் தச்சன்விளை பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 54), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாதவ்ரானா மகன் பின்டுரானா (30) மற்றும் ஸ்ரீவைகுண்டம் இடையற்காடு பகுதியைச் சேர்ந்த ஞானம் மகன் ராஜ்குமார் (54) ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள்  திருடிய 4 யூனிட் மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், மணல் அள்ள பயன்படுத்திய எந்திரம் ஆகியபவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து குளத்தூர் போலீஸ் நிைலய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கலா வழக்குப் பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட 3பேரையும் கைது செய்தார்.

Next Story