மயிலாடுதுறை கோட்ட பகுதியில் மின்பராமரிப்பு பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு
மயிலாடுதுறை கோட்ட பகுதியில் மின்பராமரிப்பு பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை, நீடூர், மணக்குடி, பெரம்பூர், குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின்பாதைகளில் கடந்த 18-ந் தேதி முதல் மின்பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை திருச்சி தலைமை பொறியாளர் அருள்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்தில் மின்பாதைகளுக்கு இடையூறாக இருந்த 1,600 இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. 109 இடங்களில் சாய்வான மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. 112 இடங்களில் இழுவை கம்பிகள் இழுத்துக்கட்டப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மயிலாடுதுறை கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் தெரிவித்தார். குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் நடந்த பராமரிப்பு பணிகளை தலைமை பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின் பராமரிப்பு பணிகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் செய்து முடிக்க அறிவுறுத்தினார். மயிலாடுதுறை பகுதியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் மின்பராமரிப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மின்பராமரிப்பு பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்று மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story