கள்ளக்குறிச்சி சித்தேரி வரத்து வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி சித்தேரி வரத்து வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை(நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள சித்தேரி மற்றும் சித்தேரி வரத்து வாய்க்காலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது பருவமழைக்கு முன்பு வாய்க்காலை தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் சித்தேரியின் முகப்பு பகுதியில் உள்ள அடைப்புகளை அகற்றி, ஏரிக்கு நீர் வரும் வழியை சீரமைக்க வேண்டும் எனவும், ஏரியில் கழிவு நீர் விடப்படுவதால், இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெரியஏரி வாய்க்கால்
இதைத் தொடர்ந்து காந்திரோட்டில் உள்ள பெரிய ஏரி பாசன வாய்க்காலை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர், ஆக்கிரமிப்பு, வரைபடம் மற்றும் அளவீட்டு ஆய்வறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்கும்படி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் கணேசன், வினோதினி, நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story