600 பேருக்கு இலவச கபசுர குடிநீர்


600 பேருக்கு இலவச கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:10 PM IST (Updated: 28 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே 600 பேருக்கு இலவச கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

திருப்புவனம்,

திருப்புவனம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புவனம் கிளையும் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் முகாமை கழுகேர்கடை கிராமத்தில் நடத்தியது.திருப்புவனம் கிளைத் தலைவர் தீன்முகம்மது தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருந்தாளுனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பேச்சாளர் முஸ்ரப் கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். முகாமில் 600 நபர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story