36 ஆயிரம் இடங்களில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்


36 ஆயிரம் இடங்களில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:17 PM IST (Updated: 28 Jun 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மின் பராமரிப்பு பணி காரணமாக 36 ஆயிரம் இடங்களில் மரக் கிளைகள் வெட்டி அகற்றபட்டுள்ளதாக தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

கோவை

கோவையில் மின் பராமரிப்பு பணி காரணமாக 36 ஆயிரம் இடங்களில் மரக் கிளைகள் வெட்டி அகற்றபட்டுள்ளதாக தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

மின்பராமரிப்பு பணி 

கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மரங்களுக்கு அருகே மின்கம்பங்களில் மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். 

எனவே ஒவ்வொரு பகுதிக்கும் 3 மணி நேரம் மின்தடை அறிவித்து, மின் பராமரிப்பு பணி, மரக்கிளைகளை அகற்றுவதற்கு அரசு அனுமதி அளித்தது.

 இதையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள மின் கம்பிகளில் உரசிச் செல்லும் மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணியில், மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

மரக்கிளைகள் அகற்றம் 

அந்த வகையில், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஏர்பிரேக் சுவிட்ஜ் (உயர் மின் அழுத்த காற்று திறப்பான்கள்) பராமரிப்பு பணியும், பீளமேடு நவ இந்தியா காமராஜர் ரோட்டில் உயர் அழுத்த மின் பாதைகளை தொடும் வண்ணம் செல்லும் மரக்கிளைகள் அகற்றும் பணியில் நடைபெற்றது.

மின் கம்பி பகுதிக்கு செல்லும் மரத்தின் கிளை முழுவதும் ரம்பத்தால் அறுத்தும், அரிவாளால் வெட்டியும் அகற்றப்பட்டது. சில இடங்களில் உயரமாக வளர்ந்து மின்கம்பிகளை உரசிக்கொண்டிருந்த மூங்கில் மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. 

அதிகாரிகள் ஆய்வு 

முன்னதாக இந்த பணிகளை தலைமை பொறியாளர் என்ஜினீயர் டேவிட் ஜெபசிங், மேற்பார்வை பொறியாளர் என்ஜினீயர் எல்.ஸ்டாலின் பாபு மற்றும் என்ஜினீயர் குப்புராணி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 பின்னர் வெட்டி அகற்றப்பட்ட மரக்கிளைகள் மர அறுவை மோட்டார் மற்றும் ரம்பம் மூலம் துண்டு துண்டாக அறுத்து சேகரித்து கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தலைமை பொறியாளர் என்ஜினீயர் டேவிட் ஜெபசிங் கூறும்போது, கடந்த 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. 

கடந்த 10 நாட்களில் 36 ஆயிரம் இடங்களில் மின் பாதைக்கு அருகில் இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன. இதேபோல் 850 பழுதடைந்த பீங்கான் மின் சாதனங் கள் மற்றும் 435 பழுதடைந்த மின் இழுவை கம்பிகள் மாற்றப்பட்டன என்றார். 


Next Story