பொள்ளாச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:40 PM IST (Updated: 28 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை கயிற்றால் கட்டி இழுத்து வந்து விலைவாசி உயர்வுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இடைக்கமிட்டி உறுப்பினர் சேதுராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று ஆனைமலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன் குமார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட விவசாய அணி ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story