கரூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது


கரூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 28 Jun 2021 11:57 PM IST (Updated: 28 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் சலூன் உள்பட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

கரூர் 
கூடுதல் தளர்வுகள்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிவேகமாக ஏறுமுகமாக இருந்து வந்தது . இந்நிலையில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் தொடர்ந்து மிகவும் குறைந்து வருகிறது. இந்நிலையில் வருகிற 5-ந்தேதி வரை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முதல் டீக்கடைகள் திறக்கப்பட்டு, பார்சல் சேவை மட்டும் இரவு 7 மணி வரை நடைபெற்றது. 
7 மணி வரை செயல்பட்டது
கரூர் ஜவகர்பஜார், கோவை ரோடு, செங்குந்தபுரம் மெயின்ரோடு, வெங்கமேடு, தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள், வயர்கள் விற்பனை செய்யும் கடைகளும், ஹார்டுவேர் கடைகளும், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திர கடைகள், பேன்ஸி, அழகு சாதன பொருட்கள், போட்டே, வீடியோ கடைகள், ஜெராக்ஸ் கடைகள், மிக்சி, கிரைண்டர், டி.வி. போன்ற வீட்டு உபயோக மின் பொருட்கள் விற்பனை கடைகள், வாகன விற்பனை கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட விற்பனை செய்யும் கடைகள் இரவு 7 மணி வரை செயல்பட்டன. 
இதில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை, ஸ்டேஸ்னரி உள்ளிட்ட கடைகளில் அதிகளவில் பொதுமக்கள் இருந்ததை காண முடிந்தது.
விளையாடி மகிழ்ந்தனர்
இதனால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கரூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டதையடுத்து கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

Next Story