காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 12:32 AM IST (Updated: 29 Jun 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

அனுப்பர்பாளையம்:
 அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் 15 வேலம்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ரஞ்சித்குமார் (வயது 30), பிரவீன் குமார் (28) என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி திருப்பூருக்கு காரில் கடத்திக்கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 மது பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story