ஊரடங்கு தளர்வின் காரணமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பூர் திரும்பியதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊரடங்கு தளர்வின் காரணமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பூர் திரும்பியதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
x
தினத்தந்தி 29 Jun 2021 12:42 AM IST (Updated: 29 Jun 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வின் காரணமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பூர் திரும்பியதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பூர்
ஊரடங்கு தளர்வின் காரணமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பூர் திரும்பியதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இயல்பு நிலை
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. 
பாதிப்பின் அளவிற்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழக அரசு தளர்வு அறிவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் ( ஜூலை)  5-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் திருப்பூர் மாவட்டத்திற்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன்படி தொழில்நகரமான திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களும் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திருப்பூர் மீண்டும் இயல்பு நிலைக்கு நேற்றில் இருந்து திரும்பியது.
 போக்குவரத்து நெரிசல்
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று காலை முதல் மாலை வரை மாநகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. 
குறிப்பாக திருப்பூர் குமரன் சாலை, அவினாசி சாலை, பல்லடம் சாலை என பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 10 மணிக்கு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் ஒரே நேரத்தில் வந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோல் பல சாலைகளில் பின்னலாடைகள் வாகனங்களில் அங்கும், இங்குமாக ஏற்றிக்கொண்டும் செல்லப்பட்டன. 
கடந்த சில மாதமாக அமைதியாக இருந்தது திருப்பூர். இந்நிலையில் அரசின் தளர்வுகளின் காரணமாக மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது.

Next Story