கீழ்பவானி பாசன பகுதியில் மஞ்சளின் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
கீழ்பவானி பாசன பகுதியில் மஞ்சளின் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
முத்தூர்;
பழையகோட்டை கிராமம் கீழ்பவானி பாசன பகுதியில் மஞ்சளின் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மஞ்சள் சாகுபடியில் ஆர்வம்
கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர்.தற்போது பழையகோட்டை கிராம பகுதிகளில் ஒரு ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரையில் மொத்தம் 100 ஏக்கர் பரப்பளவிற்குள் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மஞ்சள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு மண் செப்பனிடுதல், குப்பை இடுதல், நல்ல தரமான விதை மஞ்சள், உழவு கூலி, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உரப் பாதுகாப்பு மேலாண்மை, களைக்கொள்ளி எடுத்தல் என ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர்.
இந்தநிலையில் இப்பகுதி விவசாயிகள் மஞ்சளின் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மஞ்சள் சாகுபடிக்கு செலவிடப்படும் உழவு பணிகள், விதைப்பு பணிகள், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பயிர்பாதுகாப்பு அனைத்தும் சின்னவெங்காயம் சாகுபடிக்கும் பயன்படும் நிலையில் உள்ளது.
அறுவடை பணிகள்
இவ்வாறு மஞ்சளின் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் நாற்றுகள் ஒரே பயிர் சாகுபடி பாதுகாப்பு மேலாண்மையில் பச்சை, பசேலென்று நன்கு வளர்ந்து உள்ளன.
இதில் மஞ்சள் செடியில் வயல்களில் இளம் பச்சை நிறத்தில் தாழ்வாகவும், சின்னவெங்காயம் நாற்றுகள் பச்சை நிறத்தில் அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்ந்து உள்ளன.
இதில் சின்னவெங்காயம் சாகுபடியில் முதல் 3 மாதங்களில் அறுவடை பணிகள் நடைபெறும். அதன் பின்பு இதனுடன் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் பயிர்கள் 10 மாதங்களில் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து மஞ்சள் சாகுபடி வயல்களில் கொத்து மூலம் மஞ்சள் கிழங்கு தோண்டி எடுக்கப்பட்டு, மஞ்சள் கிழங்கில் படர்ந்துள்ள மண்கள் அப்புறப்படுத்தப்பட்டு குவியல்களாக கொட்டப்படும். இதனைத் தொடர்ந்து மஞ்சள் கிழங்குகள் டிராக்டர்கள் மூலம் ஏற்றி விவசாயிகளின் தோட்ட களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கலன்கள் மூலம் அடுப்பில் வேக வைத்து பாலீஸ் செய்து வெயிலில் நன்கு காயவைத்து தனி விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள்களாக வாசத்துடன் மஞ்சள் நிறத்திற்கு மாற்றும் பணி நடைபெறும்.
விவசாயிகள் ஆர்வம்
அதன்பின்பு மஞ்சள் கிழங்குகள் மூட்டைகளாக கட்டப்பட்டு குடோன்களில் இருப்பு வைக்கப்படும். அதன்பின்பு ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படும்போது மஞ்சள் சாகுபடி விவசாயிகள் மஞ்சளை நேரில் கொண்டு சென்று ஏலம், டெண்டர் முறையில் விற்று பலன் அடைவார்கள்.
இதன்படி இப்பகுதிகளில் மஞ்சளின் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒரே நேரத்தில் 2 சாகுபடி செய்து நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மேலாண்மைகளில் சிக்கனத்துடன் இப்பகுதி விவசாயிகள் கூடுதல் பலன் அடையும் வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story