உடுமலையில், ஊரடங்கில் தளர்வுகளால் கடைகள் திறக்கப்பட்டன.
உடுமலையில், ஊரடங்கில் தளர்வுகளால் கடைகள் திறக்கப்பட்டன.
உடுமலை,
உடுமலையில், ஊரடங்கில் தளர்வுகளால் கடைகள் திறக்கப்பட்டன.
கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் அரசு, அடுத்தடுத்து சில தளர்வுகளை வழங்கி வருகிறது. அதன்படி ஏற்கனவே மளிகைக்கடைகள், காய்கறிகடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடுமலையில் நேற்று வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள், பெயிண்ட் கடைகள்.
சலூன்கள், பேன்சி ஸ்டோர்கள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன. நகைக்கடைகள், ஜவுளிகடைகள் ஆகியவை திறக்கப்படவில்லை. இவற்றை தவிர மற்ற பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்ததால், இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர்.பலர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
போக்குவரத்து அதிகரிப்பு
அதனால்பொள்ளாச்சி சாலை, வ.உ.சி.வீதி, சத்திரம் வீதி, சீனிவாசா வீதி, கல்பனாசாலை, வெங்கிடகிருஷ்ணா சாலை, ராஜேந்திரா சாலை, தளிசாலை உள்ளிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் ஓரளவிற்கு அதிகமாக இருந்தது.வாகனங்களின் போக்குவரத்தும் கடந்த சில நாட்களை விட நேற்று அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story