ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவுக்கு முயன்றதால் இணைய தளம் முடங்கியது


ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவுக்கு  முயன்றதால் இணைய தளம் முடங்கியது
x
தினத்தந்தி 29 Jun 2021 1:36 AM IST (Updated: 29 Jun 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றதால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றதால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். 
ஆன்லைனில் டோக்கன்
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த நேற்று முதல் பொதுமக்கள் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் முன்பதிவு ெசய்து டோக்கன் பெற வேண்டும் என கலெக்டர்  அறிவித்திருந்தார். இந்த டோக்கன் பதிவு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. 
குமரியில் நேற்று 21 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. நாகர்கோவில் நகரில் டதி பள்ளி, இந்துக்கல்லூரி, அலோசியஸ் பள்ளி என மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
கலெக்டர் அறிவிப்பின்படி டோக்கன் பெற அறிவிக்கப்பட்டிருந்த இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்தனர். அவர்கள் தங்களுடைய இணையதள பதிவு டோக்கன்களுடன் வந்து சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி சென்றனர். 
செல்போனில் முயற்சி
நேற்று காலை ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆன்லைனில் பதிவு செய்ய முயன்றதால் டோக்கன் பதிவு செய்யும் செயலி முடங்கியது. இதன் காரணமாக பலருக்கு டோக்கன் பதிவு செய்ய முடியாமல் போனது. இதனால் ஏராளமானோர் ஆன்லைன் டோக்கன் இன்றி நாகர்கோவிலில் நடந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் ஆன்லைன் டோக்கன் எடுத்தவர்களுக்கு தனிவரிசை அமைத்து அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். அத்துடன் ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலர் சிறப்பு முகாம்களில் இருந்தவாறு தங்களது செல்போன்கள் மூலம் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய முயன்றனர். சிறப்பு முகாம்கள் அனைத்திலும் ஆண்களும், பெண்களும் தங்களுடைய செல்போன்கள் மூலம் ஆங்காங்கே நின்று ஆன்லைன் டோக்கன் பெற பதிவு செய்ய முயன்ற காட்சிகளை காண முடிந்தது. ஆனாலும் பலருக்கு டோக்கன் கிடைக்கவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பினர்
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு அந்தந்த சிறப்பு முகாம்களில் உள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஒரு நாள் மட்டும் ஆன்லைன் டோக்கன் இல்லாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி போட அதிகாரிகள் முகாம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து ஆன்லைன் டோக்கன் பெறாதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையே ஏராளமானோர் தங்களுக்கு தடுப்பூசி போட டோக்கன் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற சந்தேகத்தில் தடுப்பூசி போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்கள் அனைத்திலும் நேற்று கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் ஆன்ைலன் மூலமாக ேடாக்கன் கிடைக்காதவர்களுக்கு முதல் நாளான நேற்று டோக்கன் கொடுத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைன் பதிவு செய்து டோக்கன் பெறுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று ஒரே நாளில் 30 முகாம்களிலும் மொத்தம் 7 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story