அரக்கோணம் அருகே; கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் வெட்டிக்கொலை
அரக்கோணம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் வெட்டிக்கொலை
அரக்கோணத்தை அடுத்த மின்னல் பகுதியை சேர்ந்தவர் பஸ்வான் (வயது 28). இவர் நேற்று மின்னல் கிராமத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றுள்ளார்.
அப்போது அந்தப்பகுதியில் இருந்த சிலருக்கும், பஸ்வானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே மேல்ஆவதம் பகுதியில் உள்ளவர்களுக்கும், மின்னல் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் பஸ்வான் டாஸ்மாக் கடையில் தகராறு செய்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து தாக்கி, வெட்டியுள்ளனர். இதில் பஸ்வான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் பஸ்வான் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
பழிக்குப்பழியாக நடந்ததா?
அப்போது அங்கு கூடியிருந்த மின்னல் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக கூறியதால் கிராம மக்கள் உடலை எடுக்க அனுமதித்தனர்.
அதைத்தொடர்ந்து பஸ்வான் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா விசாரணை மேற்கொண்டார்.
கொலைசெய்யப்பட்ட பஸ்வான் பல கொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் முன் விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் பகுதியில் இது போன்று ஒரு மாதத்தில் பழிக்குப் பழியாக 4 கொலைகள் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story