கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராயக்கோட்டை:
கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா நிவாரண நிதி ரூ.7,500 வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் சீனிவாஸ், நகர செயலாளர் நாகராஜ், துணை செயலாளர் குருராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட மகளிரணி தலைவி சியாமளா, துணை தலைவி ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி பாபு, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், இளைஞர் அணி தலைவர் தினேஷ்குமார், முன்னாள் நகர செயலாளர் குட்டி என்கிற முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தேன்கனிக்கோட்டை
இதேபோல் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூதட்டியப்பா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் விவசாய சங்க மாநில துணை தலைவர் லகுமய்யா, நகர செயலாளர் சலம் பேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செல்வம், தொண்டரணி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், நகர செயலாளர் சந்திரப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரசாந்த், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊரடங்கின் போது பாதித்த அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.7,500 நிவாரண தொகை வழங்கவேண்டும். பெட்ரோல், டீசலுக்கு விதித்துள்ள கலால் வரியை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story