பராமரிப்பு பணி எதிரொலி: பெங்களூருவில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக பெங்களூருவில் சில இடங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பராமரிப்பு பணி
பெங்களூரு டி.கே.ஹள்ளி, ஹரோஹள்ளி, தட்டகுனியில் உள்ள நீர்ஏற்று நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் வருகிற 30-ந் தேதி(நாளை) மற்றும் 1-ந் தேதிகளில்(நாளை மறுநாள்) பெங்களூரு கம்மகொண்டனஹள்ளி, பகலகுண்டே, டி.தாசரஹள்ளி, எச்.எம்.டி.வார்டு, பீனியா 2-வது மற்றும் 3-வது ஸ்டேஜ், ராஜகோபால்நகர், எம்.இ.ஐ.காலனி, உத்தரஹள்ளி, பெல்லந்தூர், இப்லூர், கோரமங்களா, ஏ.எஸ்.சி. சென்டர், ஜக்கசந்திரா, எஸ்.டி. பெட் பகுதி, திலக் நகர், ஜெயநகர் 4-வது டி பிளாக், பி.டி.எம் 2-வது ஸ்டேஜ், மைகோ லே-அவுட், குரப்பனபாளையா, சுத்தகுண்டேபாளையா, ஜே.பி.நகர் 4-வது மற்றும் 8-வது பேஜ், புட்டனஹள்ளி, ஜரகனஹள்ளி, அரகெரே, ஆர்.பி.ஐ. லே-அவுட் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
ராஜாஜிநகர்
இதுபோல தோரேசனிபாளையா, கொத்தனூர் தின்னே, கோனணகுண்டே, சுஞ்சனகட்டா, எச்.எஸ்.ஆர் லே-அவுட் 1 முதல் 7 வது செக்டர், அக்ரஹாரா, மங்கமனபாளையா, சந்திரா லே-அவுட், நாகரபாவி, உல்லால்,
மல்லத்தஹள்ளி, ராஜாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், பசவேஸ்வரா நகர், நந்தினி லே-அவுட், கோரகுண்டேபாளையா, காமாட்சி பாளையா, கமலா நகர், குருபரஹள்ளி ஆகிய பகுதிகளிலும் குடிநீர் நிறுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story