மதுபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது


மதுபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 2:00 AM IST (Updated: 29 Jun 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அசோகன் (வயது 27). டீக்கடை தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மதுபோதையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் தகராறு செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சின்ன கோவிலாங்குளம் போலீஸ் ஏட்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அசோகன், போலீஸ் ஏட்டு பாலகிருஷ்ணனையும் அவதூறாக பேசி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் ஏட்டுவின் மீது சேறு வீசியும், அவரது ஹெல்மெட்டை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அசோகன் தப்பி ஓடி விட்டார். மதுபோதையில் அசோகன் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சின்ன ேகாவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அசோகனை வலைவீசி தேடி வந்தனர். அவரை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த அசோகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Next Story