"டெல்டா பிளஸ் ஆய்வகம் வரவேற்கதக்கது" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து


டெல்டா பிளஸ் ஆய்வகம் வரவேற்கதக்கது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து
x
தினத்தந்தி 29 Jun 2021 5:01 AM IST (Updated: 29 Jun 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

"டெல்டா பிளஸ் கொரோனா வைரசுக்கு ஆய்வகம் அமைப்பது வரவேற்கதக்கது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

எந்த விலையும் இல்லாமல் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தது போல் உடனடியாக தமிழகத்திற்கு தடுப்பூசியை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பேசிய அவர், டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் அதிகம் இருக்கும் என்று மத்திய அரசு கூறி இருப்பதால் போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார். 

Next Story