மும்பையில் 35 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட ஜம்போ கொரொனா சிகிச்சை மையம்
புதிதாக கட்டப்பட்டுள்ள ஜம்போ கொரோனா சிகிச்சை மையத்தில் 2,170 படுக்கை வசதி உள்ளது.
மும்பை,
நாட்டிலேயே அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியமாகும். தற்போது கொரோனா 2-வது அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் 3-வது அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிப்பதால் அதற்காக முன் ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் புறநகரான மலாடில் புதிய ஜம்போ கொரோனா மையத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள ஜம்போ கொரோனா சிகிச்சை மையத்தில் 2,170 படுக்கை வசதி உள்ளது. அவற்றில் 70 சதவீதம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாகும். மேலும் 192 ஐ.சி.யூ. படுக்கைகள்.
இதேபோல குழந்தைகள் மருத்துவ வார்டில் 200 ஆச்சிஜன் படுக்கைகள் மற்றும் 50 ஐ.சி.யூ. படுக்கைகள் உள்ளன. இந்த சிகிச்சை மையம் வெறும் 35 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாகும் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தற்காலிக சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story