திண்டுக்கல்லில் ரெயில்களின் வருகையை தெரிவிக்க புதிய டிஜிட்டல் பலகை
திண்டுக்கல்லில் ரெயில்களின் வருகையை தெரிவிக்க புதிய டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் வழியாக 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. இந்த ரெயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் உள்ளன. அந்த நடைமேடைகளில் ரெயில் நிற்கும் போது பெட்டிகள் நிற்கும் இடத்தை குறிப்பிடும் டிஜிட்டல் பலகைகள் உள்ளன. இவை கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்படவில்லை. இதனால் பயணிகள் சிரமப்படுவதை தவிர்க்க தற்காலிக பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் ரெயில்கள் வரும் நேரத்தை தெரிவிக்கும் வகையில், டிக்கெட் கவுண்ட்டர் அருகே சுரங்கப்பாதை அருகே டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டது. அது, தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த டிஜிட்டல் பலகையும் கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்படவில்லை. இதனால் ரெயில்கள் வரும் நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.
இதை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் புதிதாக டிஜிட்டல் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிக்கெட் கவுண்ட்டர் அருகே சுரங்கப்பாதையின் முன்பு புதிதாக டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 10 ரெயில்களின் பெயர், எண், ரெயில் வரும்நேரம், ரெயில்கள் நிற்கும் நடைமேடை எண் ஆகியவற்றை பார்க்கலாம். மேலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ரெயில்கள் பற்றிய தகவல் வெளியாகிறது.
Related Tags :
Next Story