வாணாபுரம் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாய் 52 காசாக உயர்வு
வாணாபுரம் பகுதியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
வாணாபுரம்
101 ரூபாய் 52 காசு
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள், கூலித் தொழிலாளிகள் அன்றாட வருமானத்தை பெட்ரோல் பங்க்குகளில் கொடுத்துவிட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வாணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாய் 40 காசாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை மேலும் 12 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
இந்த விலை உயர்வு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள் 300, 400 ரூபாய் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் இருசக்கர வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூட போட முடியாத சூழல் நிலவிவருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் கூறுகையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுவதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சைக்கிளை வாங்கி பயன்படுத்தக் கூடிய சூழல் நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் மட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றாடம் பயணிக்கும் விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story