கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, முகமது ஷா நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்விற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் கதிர் நிலவன், மாவட்ட கவுன்சிலர் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், பகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல்
திருமருகல் பஸ் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜீ தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருமருகல் கிளை செயலாளர் இரணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் நடுக்கடை கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூரில் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story