திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி இயங்கி வந்த மர அறுவை ஆலைக்கு சீல்
திருப்பத்தூர் அருேக அனுமதியின்றி இயங்கி வந்த மர அறுவை ஆலைக்கு வனத்துறையினர் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பத்தூர்
தணிக்கை
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் ஆர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் திருப்பத்தூரை சுற்றியுள்ள இயங்கிவந்த மர அறுவை ஆலைகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பத்தூர் அருகே உள்ள டி.வீரப்பள்ளி கிராமத்தில் வேலு என்பவர் மகன் அசோக் அனுமதியின்றி மர அறுவை ஆலையை நடத்தி வருவது தெரியவந்தது.
‘சீல்’ வைப்பு
மேலும் அவர் அனுமதி பெறாமல் பட்டியல் இன மரங்களை இருப்பு வைத்திருந்தார். இதனையடுத்து அனுமதி பெறாமல் இயங்கி வந்த மர ஆலையை திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் எம். பிரபு மூடி ‘சீல்’ வைத்து குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல அனுமதி இன்றி இயங்கி வரும் மர அறுவை ஆலைகளில் இருப்பு கணக்குகள் முறையாக பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும்.
இதில் ஏதேனும் முறைகேடுகள் நடப்பது தெரிய வந்தால் அதுபோன்ற மர அறுவை ஆலைகளும் மூடி ‘சீல்’ வைக்க உத்தரவிடப்படும் என வனத்துறை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story