பரமக்குடியில் பலத்த மழை


பரமக்குடியில் பலத்த மழை
x
தினத்தந்தி 29 Jun 2021 10:47 PM IST (Updated: 29 Jun 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் பலத்த மழை பெய்தது

பரமக்குடி, 
பரமக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் உழவர் சந்தை பகுதி, ஆர்ச் பகுதி, காந்தி சிலை பகுதி உள்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், பொதுமக்களும் மழைநீரில் சிரமப்பட்டனர். மேலும் இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசி மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது.

Next Story