தூத்துக்குடியில் உலர் பூ தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து


தூத்துக்குடியில் உலர் பூ தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 29 Jun 2021 10:48 PM IST (Updated: 29 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உலர் பூ தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 66). இவர் நேரு காலனியில் உலர் பூ உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.  இந்த ஆலையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து உள்ளது. இதில் அந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டு இருந்த உலர் பூக்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியது. இதில் உலர் பூக்கள் மற்றும் உலர் பூ தயாரிக்க வைத்திருந்த ரசாயனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. ஆலையின் மேற்கூரையும் எரிந்து நாசமானது. 

சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.13 லட்சம் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story