கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள் புதிதாக 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி
2 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 26 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 192 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது ஆண் மற்றும் 59 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 192-ல் இருந்து 194-ஆக உயர்ந்துள்ளது.
95 பேருக்கு தொற்று
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 760 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 95 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 851-ல் இருந்து 26 ஆயிரத்து 946-ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 984 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story