வீடு புகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு


வீடு புகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 11:04 PM IST (Updated: 29 Jun 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

அரிமளம், ஜூன.30-
அரிமளம் அருகே உள்ள வம்பரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் நேற்று முன்தினம் இரவு தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் ஒரு அறையில் படுத்து தூங்கினார். மற்றொரு அறையில் சரண்யாவின் தாய் கலா படுத்து தூங்கி கொண்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் சரண்யா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த கலாவின் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த கலா கூச்சல் போட்டார். இதனையடுத்து மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக சரண்யாவின் உறவினர் ஜம்புலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story