ஜவுளி தொழிலை மேம்படுத்த திட்டங்கள்
ஜவுளி தொழிலை மேம்படுத்த திட்டங்கள்
கோவை
ஜவுளி தொழிலை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்னிந்திய பஞ்சாலை கழகம் மற்றும் துணிநூல் தொழில் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி பேசியதாவது
ஜவுளித் தொழில் வளர்ச்சியின் காரணமாகவே கோவை தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் என்றும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 54 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 15 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் கீழ் 11,361 கைத்தறி நெசவாளர்களும், 3,071 விசைத்தறி நெசவாளர்களும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 152 கிளை விற்பனை நிலையத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதுடன், சுமார் 600 விற்பனை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
திட்டங்கள்
மேலும், நெசவாளர்களின் வாழ்வாதரத்தை உயர்த்து வகையில், நெசவாளர்களின் முத்ரா கடன் திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி துணிகள் விற்பனைக்கு தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோல் இன்னும் ஜவுளித் தொழில் செழிக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முதன்மை செயலர் அபூர்வா, ஆணையர் பீலா ராஜேஷ், கலெக்டர் சமீரன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் ராஜேஷ், சைமா தலைவர் அஸ்வின் சந்திரன், சைமா பருத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சங்கத் தலைவர் ஜெயபால்,
இந்திய ஜவுளி உற்பத்தி எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் செந்தில் குமார், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் துணை தலைவர் ஜெகதீஸ்சந்திரன் மற்றும் ஜவுளித் தொழில் அமைப்பின் நிறுவனர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story