வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 11:08 PM IST (Updated: 29 Jun 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 40). இவர் நேற்று சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரங்காபுரம் புலவர்நகரை சேர்ந்த யோகேஷ் (28) என்பவர் அங்கு வந்து வடிவேலனை வழிமறித்து, நான் பல கொலை செய்துள்ளேன். உன்னிடம் உள்ள பணத்தை கொடுத்துவிடு என்று மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

இதுகுறித்து வடிவேலன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேசை கைது செய்தனர்.

இதேபோல, விருதம்பட்டை சேர்ந்த சேட்டு (49) என்பவர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து  கத்தியை காட்டி மிரட்டி சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2,500-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். 

இதுகுறித்து சேட்டு வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது காகிதப்பட்டறையை சேர்ந்த ஜனா என்ற ஜனார்த்தனன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story