தாமதமின்றி கணினியில் பதிவேற்றம் செய்ய ஆணையாளர் உத்தரவு


தாமதமின்றி கணினியில் பதிவேற்றம் செய்ய ஆணையாளர் உத்தரவு
x
தினத்தந்தி 29 Jun 2021 11:09 PM IST (Updated: 29 Jun 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

தாமதமின்றி கணினியில் பதிவேற்றம் செய்ய ஆணையாளர் உத்தரவு

கோவை

கோவை கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த பணிகளை மேற்கொள்பவர்களை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சந்தித்து அறிவுரை வழங்கினார். 

அவர் கூறும்போது, பரிசோதனை செய்த விவரங்களை கோவிட்-19 பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். 

பணியில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.அத்துடன் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

 முன்னதாக அவர், விளாங்குறிச்சி சாலை ராமன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி மையத்தை  ஆய்வு செய்தார். 

அப்போது அவர், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் விவரங்களை தாமதமின்றி கணினிகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story