பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்
பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்
சிவகங்கை
சமூக நலத்துறை மூலம் இலவச தையல் எந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட சமூகநலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் கணவரால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத்திறனுடைய பெண் என்பதற்கான சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட குடும்ப வருமானச் சான்று(ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்), 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story