22 இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைப்பு


22 இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 11:15 PM IST (Updated: 29 Jun 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற மின் பராமரிப்பு பணியில் 22 இடங்களில் மின்கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்ற மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற மின் பராமரிப்பு பணியில் 22 இடங்களில் மின்கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்ற மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.
மின்கம்பங்கள்
சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், மானாமதுரை மின் நிலையத்தை சார்ந்த தெ.புதுக்கோட்டை மின் பாதையில் நடைபெற்ற பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு கடந்த 19-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 10 நாட்கள் சிவகங்கை மின் பகிர்மான வட்டத்திலுள்ள சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட 25 துணை மின்நிலையங்களில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் பகுதி வாரியாக 2 அல்லது 3 மணி நேரத்திற்கு மிகாமல் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
இந்தபணியின் போது 3,189 இடங்களில் மரக்கிளைகள் வெட்டப்பட்டது. 113 சாய்ந்த மற்றும் உடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டது. 
பராமரிப்பு பணிகள்
மேலும் 22 இடங்களில் புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டது. 94 மின்மாற்றிகளில் திறப்பான்கள் சரிசெய்யப்பட்டது. 197 இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டன. 125 ஜம்பா எந்திரம் புதுப்பிக்கப்பட்டது. 45 இடங்களில் தொய்வான மின்பாதை சரி செய்யப்பட்டது. 50 இடங்களில் இழுவைக்கம்பி பொருத்தப்பட்டது. இதனால் மின்வினியோகத்தில் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்பட்டது. 
இத்துடன் அடிக்கடி மின் தடை ஏற்படாத வகையில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

Next Story