குள்ளஞ்சாவடி அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் 2 வாலிபர்கள் கைது முயல் வேட்டைக்கு சென்றபோது சிக்கினர்
குள்ளஞ்சாவடி அருகே முயல் வேட்டைக்கு நாட்டுத்துப்பாக்கியுடன்ட சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பெருமாள் ஏரி கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிந்தாமணிகுப்பம் கிராமத்தையொட்டி அமைந்துள்ள ஏரியின் மதகு அருகே 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.உடன் போலீசார் மதகு அருகே சென்றனர். இதை பார்த்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தார். இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
விசாரணையில் குள்ளஞ்சாவடி அடுத்த பெரிய காட்டுசாகை மேற்கு தெருவை சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் விஜய் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த கவியரசன் (21) என்பது தெரியவந்தது.
நண்பர்களான இவர்கள் பெருமாள் ஏரி பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி முயல்களை வேட்டையாட வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, ¼ ஈயகுண்டுகள் , இரும்பு குண்டு மற்றும் 100 கிராம் கரி உப்பு கலந்த வெடிமருந்து ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story