வால்பாறை மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது


வால்பாறை மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது
x

வால்பாறை மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது.

வால்பாறை

வால்பாறை மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது. 

சிங்கவால் குரங்குகள் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலையார் அணை உள்பட பல்வேறு சுற்றுலா மையங்கள் உள்ளன. 

தற்போது கொரோனா பரவல் காரணமாக இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளன. 

இதனால் அங்கு தற்போது யாரும் செல்வது இல்லை. இது ஒருபுறம் இருக்க ஆழியாறு அணையில் இருந்து தொடங்கும் மலைப்பாதை முதல் வால்பாறை வரை செல்லும் சாலையின் ஓரத்தில் வரையாடுகள், சிங்கவால் குரங்குகள் மற்றும் சாதாரண குரங்குகள் என்று வனவிலங்குகளை காணமுடியும். 

தின்பண்டங்கள் 

சுற்றுலா செல்பவர்கள் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழகி விட்டனர். அவற்றை வாங்க ஏராளமான குரங்குகள் சாலையோரத்தில் இருப்பது உண்டு. தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் வால்பாறைக்கு செல்வது இல்லை. 

இதனால் இந்த மலைப்பாதையில் உணவுக்காக காத்திருக்கும் சிங்கவால் குரங்குகள் உள்பட மற்ற குரங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.  

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

எண்ணிக்கை குறைந்தது 

குரங்குகள் வனப்பகுதியில் உள்ள பழங்களை தேடி சாப்பிட்டுக் கொள்ளும். சுற்றுலா பயணிகள் அவற்றுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழகியதால், அவை உணவுக்காக சாலையோரத்திலேயே காத்து கிடந்தன. 

தற்போது சுற்றுலா பயணிகள் யாரும் வருவது இல்லை என்பதால் அவற்றுக்கு உணவுகளை யாரும் வழங்குவது இல்லை. இதனால் அவை உணவு தேடி வனப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றன. 

இதன் காரணமாக அங்கு இருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக மாறிவிட்டது. 

வனத்துறை நடவடிக்கை

இதுபோன்ற நிலை நீடித்தால், இந்த பாதையில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளே இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விடும். 

எனவே ஊரடங்கு முடிந்ததும் சுற்றுலா பயணிகளை அனுமதித்தாலும், அவர்கள் வால்பாறை செல்லும்போது, குரங்குகளை பார்த்தாலும் அவற்றுக்கு தின்பண்டங்களை வழங்கக்கூடாது.  

இந்த விஷயத்தில் வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, குரங்குகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதித்தால் மட்டுமே இனிமேல் குரங்குகள் மலைப்பாதையில் உலாவு வதை தடுக்க முடியும். அதை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story