சூளகிரி அருகே கார் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலி


சூளகிரி அருகே கார் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 30 Jun 2021 12:18 AM IST (Updated: 30 Jun 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி கார் மோதி பலியானார்கள்.

சூளகிரி:

தம்பதி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் முரளி (வயது 37), சரக்கு வேன் டிரைவர். இவருடைய மனைவி ராணி (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஓசூருக்கு திரும்பினர். 
பலி
வழியில், காமன்தொட்டி அருகில் உள்ள தட்சிண திருப்பதி கோவில் அருகே சென்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது. 
இதில், முரளி மற்றும் ராணி ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டு, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
கைது
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் டிரைவர் வீரமணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய நிலையில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story