ஆலங்குளத்தில் பலத்த மழை


ஆலங்குளத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 30 Jun 2021 12:31 AM IST (Updated: 30 Jun 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலங்குளம், 
ஆலங்குளத்தில் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கடுமையான வெயில் 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். 
இந்தநிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
பலத்த மழை 
இதையடுத்து  மாலை 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் ஆக ஆக பலத்த மழையாக பெய்தது. 
மாலை 6.30 மணி வரை இடியுடன் பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆலங்குளம், எதிர்கோட்டை, கல்லமநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, குண்டாயிருப்பு, கரிசல்குளம், மேட்டூர், சுண்டங்குளம், ஏ.லட்சுமி புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி 
இந்த மழை தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு நல்லது என மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கூறினர். சிறிய குட்டை, ஊருணிகளில் தண்ணீர் பெருகியது. ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்க பெரிதும் உதவியாக இந்த மழை இருந்ததாக பொதுமக்கள் கூறினர். 

Related Tags :
Next Story