காங்கேயம் அருகே தேங்காய் களத்தில் வேலை செய்து வந்த 5 பேர் வருவாய்த்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்
காங்கேயம் அருகே தேங்காய் களத்தில் வேலை செய்து வந்த 5 பேர் வருவாய்த்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்
காங்கேயம்
காங்கேயம் அருகே தேங்காய் களத்தில் வேலை செய்து வந்த 5 பேர் வருவாய்த்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேங்காய் களம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூர் பகுதியில் கோவை கிணத்துக்கடவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தேங்காய் உலர் களம் செயல்பட்டு வருகிறது. இந்த களத்தில் சிலர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக திருப்பூர் மாவட்ட வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தாராபுரம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ரங்கராஜன், காங்கேயம் தாசில்தார் பி.சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள் அந்த தேங்காய் உலர் களத்திற்கு நேற்று முன்தினம் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
5 பேர் மீட்பு
அப்போது அங்கு கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தேங்காய் களத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வேலைபார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக குறைவான கூலி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த 5 பேரும் மீட்கப்பட்டனர்.
அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் நேற்று முன்தினம் மாலையே அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொத்தடிமைகளா?
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேங்காய் உலர்களத்தில் பணிபுரிந்த 2 குடும்பத்தினர் தங்களது ஊருக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேங்காய் உலர் களத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
Related Tags :
Next Story