மினி லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
வள்ளியூரில் மினி லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.
வள்ளியூர்:
வள்ளியூர் கலையரங்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்ற மணி (வயது 54). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மதியம் ஆட்டோவில் ஆட்களை சவாரி ஏற்றி கொண்டு கேசவனேரி-வள்ளியூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ சாலையை விட்டு கீழே இறங்கி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவை ஓட்டி சென்ற முத்துகிருஷ்ணன் படுகாயமடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முத்துகிருஷ்ணனை மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவர் பணகுடியை சேர்ந்த ராஜாமணி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story