வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
புதுச்சேரி,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
பட்டதாரி பெண்
புதுவை ரெட்டியார் பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் ஜேஸ்லின் மரியோ (வயது 25). பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இதற்காக இணையதளங்களில் அவர் பார்வையிட்டார்.
இந்த ஜெரார்டு முல்லக்ஸ் என்பவர் ஜேஸ்லின் மரியோவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவருக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், இதற்கு பணம் செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரூ.5¼ லட்சம் மோசடி
இதை நம்பிய ஜேஸ்லின் மரியோ, பல்வேறு கட்டங்களாக இணையதளம் மூலம் பலமுறை பணம் செலுத்தினார். அவ்வாறு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வரை அவர் செலுத்தியுள்ளார். ஆனால் ஜேஸ்லின் மரியோவுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக ஜெரார்டு முல்லக்சை தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்து சரியான பதிலும் இல்லை. அப்போதுதான் ஜேஸ்லின் மரியோ ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொடரும் சம்பவம்
புதுச்சேரியில் அண்மை காலமாக ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை பெண் ஊழியர், ஆசிரியை ஆகியோர் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பட்டதாரி பெண்ணும் அந்த வரிசையில் மோசடி செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story