கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் கொள்ளை


கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 30 Jun 2021 2:37 AM IST (Updated: 30 Jun 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடத்தில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

திருவேங்கடம்:
திருவேங்கடத்தில் கல்குவாரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கல்குவாரி உரிமையாளர்

திருவேங்கடம் மெயின் பஜாரில் கடமலை ரோட்டில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). இவர் திருவேங்கடம் அருகே கல்குவாரி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊரான திருமங்கலத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டார்.

பணம் கொள்ளை

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. நகைகள் வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் நகைகள் தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் சோதனை நடத்தப்பட்டது. அந்த மோப்ப நாய், வீட்டின் மேல் மாடி மற்றும் திருவேங்கடம் பஜார் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story