சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jun 2021 3:25 AM IST (Updated: 30 Jun 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சேலம்
நிவாரண பொருட்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடக கலைஞர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் நடந்தது.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., நாடக நடிகர் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நாடக கலைஞர்கள் 300 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முககவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவை தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், பகுதி செயலாளர் யாதவமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story