சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதானவருக்கு 2 நாள் போலீஸ் காவல்


சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதானவருக்கு 2 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:12 AM IST (Updated: 30 Jun 2021 10:12 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதானவருக்கு 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி தேசிய புலனாய்வு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

பூந்தமல்லி,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜியாபுதீன் (என்ற) சிராஜூதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஜியாபுதீனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து, நேற்று மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 2 நாட்கள் ஜியாபுதீனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் வருகிற 1-ந்தேதி மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜியாபுதீனை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர்.

Next Story