துபாயில் இருந்து உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து, விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது கடலூரை சோ்ந்த பசூலுதீன் (வயது 26) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.
அதில், பசூலுதீன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 650 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பசூலுதீனை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story