திருவள்ளூர் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


திருவள்ளூர் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 11:25 AM IST (Updated: 30 Jun 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் கமல் (வயது 27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 30-ந்தேதியன்று கமல் தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் வேலையின் காரணமாக திருவள்ளூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் என்கிற அப்பு (28), கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த முருகன் என்கிற சந்தோஷ் (28) ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்து சென்றனர்.

இது குறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ், முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மேற்கண்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் நேற்று முன்தினம் லோகேஷ், முருகன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

Next Story